Wednesday, February 25, 2015

வழுக்கை தலை ஏற்படுவதைத் தடுக்கும் இயற்கை வைத்தியங்கள் :




இளம் வயதிலேயே ஆண்களுக்கு வழுக்கை தலை ஏற்படுவதைத் தடுக்கும் இயற்கை வைத்தியங்கள் :-
ஆண்கள் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனை தான் வழுக்கை தலையைப் பெறுவது. பொதுவாக இத்தகைய வழுக்கை தலையானது முடி உதிர்வதால் ஏற்படும். சாதாரணமாக ஒருவருக்கு ஒரு நாளைக்கு 50-100 முடியானது உதிரும். ஆனால் சிலருக்கு அளவுக்கு அதிகமாக உதிர்வது போன்று தோன்றும். அப்படி உங்களுக்கு முடி உதிர்வது அளவுக்கு அதிகமாக இருந்தால், உடனே மருத்துவரை அணுகி இதற்கான காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில் முடி உதிர்வது ஒருசில நோய்களுக்கும் அறிகுறியாக இருப்பதால், உடனே கவனிக்க வேண்டியது அவசியம். அதிலும் பெண்களை விட ஆண்களுக்கு தான் வழுக்கை தலை சீக்கிரம் ஏற்படும். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் பரம்பரை, ஊட்டச்சத்து குறைபாடு என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம். இவற்றில் பரம்பரை காரணமாக ஏற்படுவதை தடுக்க முடியாது. ஆனால் தள்ளிப் போட முடியும்.
அதுவும் ஒருசில செயல்களைப் பின்பற்றுவதன் மூலம், மயிர்கால்களை வலுவுடன் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். அதில் முதலில் செய்ய வேண்டியது வாழ்க்கை முறையில் சிறு மாற்றங்களுடன், போதிய முடிக்கான பராமரிப்பும் மேற்கொள்ள வேண்டும்.
ஆயில் மசாஜ் :-
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தேங்காய், பாதாம், ஆலிவ் போன்ற எண்ணெய்களைக் கொண்டு நன்கு மசாஜ் செய்து, நன்கு ஊற வைத்து குளிக்க வேண்டும். வேண்டுமானால் இரண்டு மூன்று எண்ணெய்களை ஒன்றாக சேர்த்தும் முடிக்குப் பயன்படுத்தினால், முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, முடி வளர்ச்சி அதிகரிக்க ஆரம்பிக்கும்.
தேங்காய் பால் :-
தேங்காய் பால் கொண்டு தலைக்கு மசாஜ் செய்தால், அது மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்களைக் கொடுத்து, அதனை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். இதனால் முடி உதிர்வது தடுக்கப்படும். இந்த முறையை ஆண்கள் தவறாமல் வாரம் 2-3 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
மருதாணி இலைகள் :-
மருதாணி இலையில் கைக்கு மட்டும் நல்ல நிறத்தைக் கொடுக்க பயன்படுவதில்லை. இது முடிக்கு நல்ல சத்துக்களைக் கொடுக்க வல்லது. அதிலும் இதனை கடுகு எண்ணெயில் போட்டு கொதிக்க விட்டு, பின் அந்த எண்ணெயை குளிர வைத்து, தினமும் தலைக்கு தடவி வர வேண்டும். இதன் மூலம் முடி உதிர்வது உடனே நின்றுவிடும்.
நெல்லிக்காய் :-
முடி வளர்ச்சியைத் தூண்டும் பொருட்களில் ஒன்று தான் நெல்லிக்காய். ஏனெனில் இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது முடி உதிர்வதை உடனே தடுத்து நிறுத்திவிடும். அதற்கு நெல்லிக்காயை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து, அதனை இரவில் படுக்கும் போது, தலையில் தடவி மசாஜ் செய்து, மறுநாள் காலையில் எழுந்து ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனால் முடி உதிர்வது நின்று, முடியின் வளர்ச்சி அதிகரித்து, வழுக்கை ஏற்படாமல் இருக்கும்.
வெந்தயம் :-
வெந்தயம் உடல் ஆரோக்கியத்தை மட்டும் மேம்படுத்த உதவுவதில்லை. முடி உதிர்வதைத் தடுக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது. எப்படியெனில் வெந்தயத்தில் ஆன்செடென்ட்ஸ் என்னும் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும், பாதிப்படைந்த மயிர்கால்களை குணப்படுத்தும் பொருள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் வெந்தயத்தில் முடி வளர்ச்சிக்கு அவசியமான புரோட்டீன் மற்றும் நிக்கோடினிக் ஆசிட் உள்ளது. எனவே வாரம் ஒரு முறை வெந்தயத்தில் நீரில் நன்கு ஊற வைத்து, பின் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்கு தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிக்க வேண்டும்.
வெங்காய சிகிச்சை :-
வெங்காயத்தில் முடி உதிர்வதைத் தடுக்கும் சல்பர் என்னும் பொருள் உள்ளது. இது முடி உதிர்வதைத் தடுப்பதுடன், முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். எனவே வாரம் 1-2 முறை வெங்காயத்தை அரைத்து, அதன் சாற்றினை கற்றாழை ஜெல்லுடன் கலந்து, தலையில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிக்க வேண்டும். இதன் மூலம் ஆண்களுக்கு வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கலாம்...



Thursday, February 19, 2015

முடி அடர்த்தியாக வளர இய‌ற்கை வைத்தியம்

ld926

முடி அடர்த்தியாக வளர………. பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக அடர்த்தியாக இருந்தால் எப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான். ஆனால் என்ன செய்வது அன்றைய நாட்களில் உள்ள பெண்களை போன்று இன்றைய நவநாகரிக நங்கைகளுக்கு கூந்தலை பராமரிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை. அதன் விளைவு பிளவுபட்ட அடர்த்தி குறைந்த கூந்தல்.
அதுமட்டுமல்லாது இன்றைய பெண்கள் தமது கூந்தலை பல்வேறு விதமான அலங்காரங்களுக்கு உட்படுத்துகின்றனர். முடியை கலர் செய்வது, ரீபொன்டிங், கேர்லிங் என பல வகைகளில் தமது முடியை அலங்கரித்துக் கொள்கின்றனர். அவற்றின் போது சக்திவாய்ந்த இரசாயனங்களை தலைமுடிகளுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் விரைவாக சேதமடைகிறது.
மேலும் எமது சுழலில் உள்ள தூசு துணிக்கைகள் மற்றும் வளியில் கலந்துள்ள நச்சு வாயுக்கள் போன்றவற்றாலும் கூந்தல் பாதிப்படைகின்றது. அது போன்ற பாதிப்பை வேலைக்குச் செல்லும் பெண்களே அதிகளவில் சந்திக்க நேரிடுகிறது. தலை முடி அடர்த்தி குறைவாக இருக்கிறதே என இனி கவலைப்பட தேவையில்லை. தலையில் முடி அடர்த்தியாக வளர

உங்களுக்கு சில குறிப்புக்கள்……….

 1.ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி / செம்பரத்தை பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.
 2. முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெய் தலைக்குத் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.
 3.செம்வரத்தம் இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.
 4.கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.
 5. கடுக்காய், செவ்வரத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.
 6.வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்.
 7.ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி கருமையாகும்,அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும்.
 8.மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து ஊறவிட்டு பின்பு தலைக்கு தேய்க்கவும். இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும். எப்பொழுதுமே ஒரு செய்முறை செய்தால் அதை தொடர்ந்து செய்யவேண்டும். மாற்றிக் கொண்டே இருந்தால் முடி உதிர்வதை தடுக்க முடியாது. ஷாம்புக்கள் பயன்படுத்தும் போதும் இதே போல் செய்ய வேண்டும்.அடிக்கடி ஷாம்புக்களை மாற்றினால் முடி உதிரும்.
 9.செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.

இரவில் நிம்மதியான தூக்கத்தை கெடுக்கும் உணவுகள்


இரவில் நிம்மதியான தூக்கத்தை கெடுக்கும் உணவுகள்


இரவில் சிலர் தூங்குவதற்கு அரை மணிநேரத்திற்கு முன் சாப்பிட்டுவிட்டு, உடனே படுக்க சென்றுவிடுவார்கள். ஆனால் இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற ஆசைப்பட்டால், இரவு 9 மணிக்கு மேல் ஒருசில உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

இங்கு அப்படி இரவில் நல்ல தூக்கத்தைப் பெற இரவு 9 மணிக்கு மேல் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் பார்க்கலாம்...

இரவில் 9 மணிக்கு மேல் பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். பாலில் எவ்வளவு தான் புரோட்டீன், கால்சியம் இருந்தாலும், இரவில் படுக்கும் முன் குடித்தால், அதில் உள்ள லாக்டோஸ் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தி, நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் செய்துவிடும். இரவு நேரத்தில் பாஸ்தா உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

ஏனென்றால் பாஸ்தாவில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், இரவில் தூங்க முடியாது. ஆகவே இதனை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் 35 வயதிற்கு மேல் இரவு நேரத்தில் பாஸ்தா சாப்பிடுவதை தவிர்த்து விடுவது நல்லது. இன்றைய காலத்தில் பிட்சா சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.

பிட்சாவில் கார்போஹைட்ரேட், கொழுப்புக்கள், சோடியம் போன்றவை அதிக அளவில் இருப்பதால், அவற்றை இரவு 9 மணிக்கு மேல் சாப்பிட வேண்டாம். அதை மீறியும் சாப்பிட்டால், உடல் பருமனடைந்துவிடும். பின் அவற்றை குறைப்பது சிரமமாகிவிடும். இறைச்சியில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இரவில் சிலர் இறைச்சியை சாப்பிடுவார்கள்.

பொதுவாக புரோட்டீன் உள்ள உணவுகள் செரிமானமாவதற்கு அதிக அளவு எனர்ஜி தேவைப்படும். ஆனால் இரவில் அவ்வளவு ஆற்றல் கிடைக்காததால், இறைச்சியை இரவில் உட்கொண்டால், நிம்மதியான தூக்கத்தை பெற முடியாது.

இரவு நேரத்தில் ஆரஞ்சு ஜூஸ், திராட்சை ஜூஸ் போன்றவற்றை குடிக்கக்கூடாது. இதில் அசிடிக் ஆசிட் அதிகம் இருப்பதால், அது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தி, இரவில் தூங்க முடியாமல் செய்யும். மேலும் இதில் சர்க்கரை அதிகம் இருப்பதால், இது தூக்கத்தைக் கெடுக்கும்.

அதிக உடல் உழைப்பும், உடல் பலமும் பெற சிறந்த வழி




பச்சைப் பயறு
பச்சைப் பயறை வாங்கி வந்து அதனை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் தண்ணீரை வடித்து விட்டு ஆறவிடுங்கள். சுமார் 4 மணி நேரம் கழித்து பயறு முளை வந்திருக்கும்.
இதனைத்தான் முளை கட்டிய பயறு என்கிறோம். பொதுவாக பயறுக்கும், முளை கட்டிய பயறுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. என்னவென்றால், அதில் உள்ள சத்துக்கள்தான்.எந்த தானியத்தையும் முளை வந்த பிறகு அதனை உண்பது உடலுக்கு அதிக சக்திகளைக் கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் மிக முக்கிய இடம் வகிப்பது பயறுதான்.
100 கிராம் முளை கட்டிய பயறில்,
30 கலோரிகள்
3 கிராம் புரதச்சத்து
6 கிராம் கார்போஹைட்ரேட்
2 கிராம் நார்ச்சத்து உள்ளது.
அதிக உடல் உழைப்பும், உடல் பலமும் தேவைப்படுபவர்கள் இந்த முளை கட்டியப் பயறை உணவில் எடுத்துக் கொள்ளலாம். இது உடலுக்கு குளுமையைக் கொடுப்பதால் கோடைக் காலத்தில் குழந்தைகளுக்கும் செய்து கொடுக்கலாம்.

Friday, February 13, 2015

Daily Health Tips Tamil

நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்…..

http://sportzedgect.s3.amazonaws.com/wp-content/uploads/2013/03/active-women-e1364333870366.jpg
1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.
2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
6. நிறைய புத்தகம் படியுங்கள்.
7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.
15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.
21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.
22. மன்னிக்கப் பழகுங்கள்.
23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.
30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

Wednesday, January 28, 2015

முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்


* முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை தடவினால் முடி வளரும்
* கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்க்கும்.
* நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
* சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
* முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பர்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்

Saturday, January 24, 2015

எதிர்ப்பு சக்தி ஏன் குறைகிறது?

http://img.dinakaran.com/Healthnew/H_image/ht3212.jpg

 
அறிவோம்...
எல்லையிலிருந்து நாட்டைப் பாதுகாக் கும் ராணுவம் போல், ஒவ்வொருவரின் உடலுக்குள்ளும் ஒரு எதிர்ப்பு சக்தி செயல்பட்டு நம் ஆரோக்கியத்தைப்  பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. இந்த நோய் எதிர்ப்பு சக்தி பற்றி தொற்றுநோய் சிறப்பு மருத்துவரான ராமசுப்பிரமணியன் விளக்குகிறார்...

வெள்ளை அணுக்கள் எனும் போர்வீரர்கள்


நம் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், ரத்தத்தட்டுகள் ஆகியவை இருக்கின்றன. இதில் வெள்ளை அணுக்கள்தான் உடலுக்கு நோய்  எதிர்ப்பு சக்தியைத் தருபவை. அதனால், வெள்ளை அணுக்களுக்குப் ‘போர்வீரர்கள்’ என்று இன்னொரு பெயரும் உண்டு. இன்று சுற்றுப்புறச் சூழல்  மாசடைந்து இருக்கும் நிலையில் தண்ணீர், காற்று, உணவு, சக மனிதர்களுடன் பழகுவது என்று எந்த வடிவிலும் நோயை உண்டாக்கும் கிருமிகள் நம்  உடலுக்குள் ஊடுருவலாம். அந்த கிருமிகளை எதிர்த்துப் போராடி நம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வேலையையே வெள்ளை அணுக்கள்  செய்கின்றன.

இரண்டு வகை சக்தி


நோய் எதிர்ப்பு சக்தி இரண்டு வகையில் நமக்குக் கிடைக்கிறது. ஒன்று பிறவியிலேயே அமையும் சக்தி. மாசடைந்த காற்றை சுவாசிக்கும் போது,  இயல்பாகவே உடல் அதை ஏற்றுக் கொள்ளாமல் நமக்கு மூச்சுத் திணறு கிறது. அந்த இடத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று உடல் நம்மை  நிர்ப்பந்திக்கிறது. இதுபோல், தோல் பகுதி, வயிற்றுக்குள் இருக்கும் அமிலம் என இயற்கையான எதிர்ப்பு சக்திகள் பல இருக்கின்றன. இன்னொன்று  அனுபவத்தின் அடிப்படையில் உடல் கற்றுக் கொள்ளும் எதிர்ப்பு சக்தி. அதாவது, புதிதாக ஒரு நோய் ஏற்படும்போது அந்த நோயை எதிர்க்கும் சக்தி உடலுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்ட பிறகு, அந்த நோய் பற்றி உடலில் இருக்கும் செல்கள் தெரிந்துகொள்ளும். இந்த  காரணங்களால் நோய் ஏற்படுகிறது என்பதை நினைவு வைத்துக் கொண்டு அதற்குத் தகுந்தாற்போல் உடல் எச்சரிக்கையாகிவிடும். இதற்கு ‘மெமரி  செல்கள்’ என்று பெயர். இதனால்தான், ஒருவருக்கு சின்னம்மை ஏற்பட்டால் அதன்பிறகு அவரது வாழ்நாளில் சின்னம்மை மீண்டும் வருவதில்லை.

குறைய காரணம் என்ன..?

ஒரு சில பிறவிக் குறைபாடுகள் தவிர்த்து, பிறக்கும் போது நோய் எதிர்ப்பு சக்தி எல்லோருக்கும் ஒரே அளவில்தான் இருக்கும். ஆனால், இந்த சக்தி  நாளடைவில் பல காரணங்களால் குறையும். சரிவிகித உணவு சாப்பிடாததால் ஏற்படும் சத்துக்குறைபாடு, பரம்பரைக் குறைபாடுகளால் ஏற்படும் நோய்,  உடல்நலக் குறைவின் காரணமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகள் ஆகியவற்றால் குறையும். உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை  செய்யும்போதும் இந்த நோய் எதிர்ப்பு சக்தி குறையும். என்னதான் உடலின் ரத்த வகையை எல்லாம் பார்த்து உறுப்புகளை மாற்றினாலும், ‘இது  என்னுடைய சிறுநீரகம் இல்லை’, ‘இது என்னுடைய இதயம் இல்லை’ என்பது அந்த உடலுக்குத் தெரிந்துவிடும். அதன்பிறகு, அந்த உறுப்பு மாற்றத்தை  ஏற்றுக் கொள்ளாமல் சண்டையிட ஆரம்பிக்கும். இதற்காக சில மருந்துகளைக் கொடுப்பார்கள். இந்த காரணங்களாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.  ஹெச்.ஐ.வி. போன்ற பாலியல் நோய்களாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

செய்... செய்யாதே...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நம் அன்றாட வாழ்க்கை முறையை ஒழுங்குக்குள் கொண்டு வந்தாலே போதும். பெரிதாக ஒன்றும்  தேவையில்லை. சைவமா, அசைவமா என்பதெல்லாம் பிரச்னையில்லை. என்ன உணவு சாப்பிட்டாலும் உடலுக்குத் தேவையான வைட்டமின், புரதம்,  கார்போஹைட்ரேட், தாதுக்கள் ஆகிய சத்துகள் சரிவிகிதத்தில் கிடைக்குமாறு உணவுமுறையைப் பின்பற்றினாலே போதும். இன்று உடல் உழைப்பு  குறைந்த வேலைகளையே பலரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதனால் எளிமையான உடற்பயிற்சி, அரைமணி நேரம் நடைப்பயிற்சி,  விளையாட்டுகள் என்று ஏதாவது உடல் செயல்பாடுகள் அவசியம். 6 மணி முதல் 8 மணி நேரம் வரை தூக்கம் முக்கியம். இதனுடன் புகை, மது  போன்ற தீய பழக்கங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிவேகத்தில் குறைப்பவை என்பதை சொல்லத் தேவையில்லை.

வைட்டமின் மாத்திரைகள் தேவையில்லை


நோய் எதிர்ப்பு சக்தி வேண்டும் என்பதற்காக வைட்டமின் மாத்திரை களை சிலர் எடுத்துக் கொள்வார்கள். ஆனால், இது எல்லோருக்கும் கை  கொடுக்காது. சில உணவுகள் சாப்பிட முடியாத பட்சத்தில் வேண்டுமானால் வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். அதேபோல், நம்  ஊரில் பழங்கள் சாப்பிட்டால் போதும் என்றும் நினைப்பார்கள். சரிவிகித உணவு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.

தடுப்பூசி நல்லது


தடுப்பூசி என்பதே குழந்தைகளுக்குத்தான் என்று பலரும் நினைக்க வேண்டாம். ஆனால், தடுப்பூசி என்பது எல்லா தரப்பினருக்கும் தேவை.  உதாரணத்துக்கு, குழந்தையாக இருக்கும்போது 5 டெட்டனஸ் ஊசி போட்டிருப்பார்கள். ஆனால், டெட்டனஸ் தடுப்பூசி 10 வருடத்துக்கு ஒருமுறை  போட்டுக் கொள்ள வேண்டும். இந்த ஊசி போட்டிருந்தால், இடையில் விபத்தில் அடிபட்டால் கூட தடுப்பூசி தேவையில்லாமலே நம்மைக்  காப்பாற்றிவிடும். கக்குவான், ஹெபடைட்டிஸ் என்று பல தடுப்பூசிகள் இருக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியோடு இருக்க வேண்டும் என்று  நினைப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்!

வைட்டமின் சி உதவுமா?

வைட்டமின் சி மாத்திரைகள் ஜலதோஷத்தை தடுப்பதற்கும் குணப்படுத்து வதற்கும் நல்ல நிவாரணி என்பதை ஆய்வாளர்கள்  கண்டுபிடித்திருக்கிறார்கள். அதற்கு, சராசரியாக 500 மில்லி கிராம் அளவு வைட்டமின் சி மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், இந்த  அளவு எடுத்துக் கொள்வது சிறுநீரகத்தை பாதிக்கும் என்பதால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்தக் கூடாது. வழக்கமாக நமக்குக்  கிடைக்கும் மாத்திரைகளிலும் 8 கிராம் அல்லது 10 கிராம் அளவுதான் இருக்கும். சரி... பழங்களிலிருந்தே இந்த 500 மில்லி கிராம் எடுத்துக் கொள்ள  முடியுமா என்று கேட்டால், அதற்கு கிட்டத்தட்ட 8 ஆரஞ்சு பழங்களுக்கு மேல் ஒரேநாளில் சாப்பிட வேண்டியிருக்கும். இவை எல்லாவற்றையும் விட  மிகவும் எளிதான வழி, சரிவிகித உணவை அன்றாட நம் உணவுப்பழக்கத்தில் பின்பற்றுவதுதான். அதனால், சரிவிகித உணவைத் தவிர நோய் எதிர்ப்பு  சக்திக்கு வேறு எந்த குறுக்கு வழியும் இல்லை!

வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு சில வழிகள்

1 'ஆன்ட்டி ஏஜிங்’ என்றாலே 'ஆன்டிஆக்ஸிடன்ட்’தான் நினைவுக்கு வரவேண்டும்.  வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்), சி மற்றும் இ, துத்தநாகம், செலினியம் இவை அனைத்தையுமே ஆன்டிஆக்ஸிடன்ட் என்கிறது நவீன அறிவியல். இந்தச் சத்துக்கள் நிரம்பிய காய்கள், பழங்கள், தானியங்களை எடுத்துக் கொள்ளும்போது, உங்கள் முதுமையை இன்னும் கொஞ்சம் தள்ளிப்போடலாம்.
https://adlertours.files.wordpress.com/2012/09/ayurveda1.jpg2 நெல்லிக்காயில்தான் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய், தேனில் ஊறவைத்த சிறு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள்.
3 மிளகு சேர்த்துச் சமைத்த பொன்னாங்கண்ணிக் கீரை கண்களைப் பாதுகாப்பதுடன் மேனியைப் பளபளப்பாக வைத்திருக்கும்.
4மணத்தக்காளிக் கீரை, வயிற்றுப் புண் போக்கி, ஜீரணத்தைச் சீராக்கும். கரிசலாங்கண்ணிக் கீரை, வயதானால் தோலில் தோன்றும் வெண்புள்ளிகள், தேமல் போன்றவற்றைப் போக்கி, மூப்பைக் குறைக்கும்.
5காலையில் வெறும் வயிற்றில் வெண்பூசணிச் சாறு குடிக்கலாம். உடல் எடை மற்றும் உடல் சூட்டைக் குறைக்கும். அசிடிட்டி பிரச்னை போயே போச்சு!  
6 ஆண்களுக்கு வயது அதிகரிக்கும்போது, 'ப்ராஸ்டேட்’ சுரப்பி வீக்கமடையும். அவர்கள், சுரைக்காயை, பூண்டு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால், மிகவும் நல்லது.
7 ''மேலே சொன்ன எதையுமே என்னால் வாங்கிச் செய்து சாப்பிட முடியாது'' என்பவர்கள், திரிபலாசூரணம் சாப்பிடலாம். நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் இந்த சூரணத்தை முதல் நாள் இரவே ஒரு மண் குவளையில் 2 டீஸ்பூன்  போட்டு, தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும், காலையில் வெறும் வயிற்றில் அந்தத் தண்ணீரை அருந்த வேண்டும். இது நரையைத் தடுக்கும். மலச்சிக்கல் தீரும். சரும நோய்கள் சரியாகும்.  
8 ஒவ்வொரு வேளை உணவுடனும் ஒரு பச்சை நிறக் காய் அல்லது கனியைக் கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும். மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறக் காய் அல்லது பழத்தைச் சாப்பிடுவது கூடுதல் நலம்.
9 நடுத்தர வயதில், தோல் பராமரிப்புக்குக் கண்டிப்பாக வைட்டமின் இ தேவை. முளைகட்டிய தானியங்கள், பாதம், பிஸ்தா போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளுங்கள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வேர்க்கடலை சாப்பிட்டால், இளமை உங்கள் கைவசம்.
10   அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு செலினியம், துத்தநாகம் எளிதில் கிடைத்துவிடும். சைவம் சாப்பிடுபவர்கள் அதற்கு மாற்றாக எள் மற்றும் கொட்டைப் பருப்பு வகைகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.  
11 வெற்றிலையில் குரோமியம் மிக அதிக அளவில் உள்ளது. தினமும் இரண்டு வெற்றிலைகளை மென்று சாப்பிட வேண்டும். இளமையைத் தக்கவைப்பதுடன், சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும் உதவும்.
12 சுத்திகரிக்கப்படாத நல்லெண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய் மட்டுமே நல்லது. மற்ற எண்ணெய்களுக்கு கூடிய விரைவில் குட்பை சொல்லுங்கள்.
13 காலையில் குடம் குடமாகத் தண்ணீர் குடிக்க வேண்டாம். தினமும், ஒரு மணி நேரத்துக்கு ஒரு டம்ளர் என்ற அளவில் குடித்தாலே போதுமானது.
14 முகம் கழுவியதும் அல்லது குளித்ததும் டவல் அல்லது கைக்குட்டையால், மேலிருந்து கீழ்நோக்கி அழுந்தத் துடைக்கக் கூடாது. வயது ஏற ஏற, நம் சருமம் தளர ஆரம்பிக்கிறது. அதை, நாமும் அழுத்தினால், சீக்கிரமே முகம் தொங்கிவிடும். எப்போதுமே, முகம் கழுவிய பின் ஒற்றி எடுப்பதுதான் சிறந்தது. இல்லையெனில், அப்படியே விட்டுவிடலாம்.
15   குளிக்கும்போது, சோப்பைக் கைகளில் தேய்த்துக்கொண்டு, அந்த நுரையை உடல், முகம், கை, கால்களில் கீழிருந்து மேல்நோக்கித் தடவ வேண்டும். சோப்புக்குப் பதில் கடலைமாவு, பயத்தமாவு போட்டால், இன்னும் நல்லது. இவற்றில் எண்ணெய்த்தன்மை இருப்பதால், முகத்தில் வறட்சி நீங்கி, பளபளப்பு கிடைக்கும்.
16 வாரம் ஒருமுறை நல்லெண்ணெய்க் குளியல் அவசியம். தலைக்கு சீயக்காய்த்தூள் உபயோகிப்பதும், வயோதிகத்தைத் தள்ளிப்போடும் செயல்தான். வறட்சி, பொடுகு போன்ற பிரச்னைகளால் முடி உதிராது. நரையும் ஏற்படாது.
17 செம்பருத்தி இலை அல்லது பூவை அரைத்து, கை, கால்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், வறட்சி நீங்கி மிருதுவான சருமம் கிடைக்கும்.
18  கண்களைச் சுற்றிக் கருவளையம் இருக்கிறதா? உருளைக்கிழங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை அப்படியே கண்களைச் சுற்றி 'பேக்’ போட்டுக்கொண்டு, 20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும். நாளடைவில் கருமை குறையும். எந்த ஒரு 'பேக்’குமே 20 நிமிடங்கள் இருந்தால் போதும். கண்களைச் சுற்றி எந்த க்ரீமையும் தேய்ப்பது கூடவே கூடாது. அழகு அல்லது சிவப்பு நிறத்துக்காக 'ஃபேர்னெஸ் க்ரீம்’களை வாங்கிப் பூசுபவர்களுக்கு, தோல் சுருக்கம் அதிகமாகும் அபாயம் இருக்கிறது.
19   தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். அதில், முதல் இடம் பிராணாயாமத்துக்குத் தான்.  ஹார்மோன் செயல்பாடுகளைச் சீராக்க, பிராணாயாமத்தைவிடச் சிறந்த மருத்துவம் இல்லை.
20 தகுந்த ஆசிரியரிடம் பயிற்சி பெற்றுச் செய்யும் நாடிசுத்தி பிராணாயாமம், சீத்காரி மற்றும் சீதளி போன்ற பிராணாயாமப் பயிற்சிகள், மன அழுத்தம், மனச் சோர்வு, பதற்றம் போன்றவற்றுக்கு நல்ல மருந்து.
21 உடல் 'ரிலாக்ஸேஷனு’க்கு சவாசனம், மக்ராசனம் போன்ற யோகப் பயிற்சிகள் மிகச் சிறந்தவை. அலுவலகத்திலிருந்து வந்ததும், கை, கால்களைத் தளர்த்தி, சவாசனத்தில் படுத்து எழுந்தால், அழுத்தம் குறைந்து புத்துணர்ச்சி கிடைக்கும். மனதை ஒருமுகப்படுத்தி செய்யும் தியானம் இளமையைத் தக்கவைக்கும்.
22 யோகாசனம் செய்ய முடியாதவர்கள், நீச்சல் பயிற்சி அல்லது நடைப்பயிற்சியாவது செய்ய வேண்டும். அந்தப் பயிற்சியை, 'கடனே’ என்று செய்யாமல் ரசித்து, அனுபவித்துச் செய்தால் பலன் இன்னும் அதிகம்.
23 இஸ்லாமியர்கள் தொழுகையின்போது கால்களை மடக்கி அமரும் நிலைதான் வஜ்ராசனம். 'வஜ்ரம்’ என்றால் வைரம் என்று பொருள். வைரம் பாய்ந்த கட்டையாக நம் உடலை வைத்திருக்க, வஜ்ராசனத்தை விடச் சிறந்த பயிற்சி இல்லை. சாதாரணமாக வீட்டில் அமரும்போதும், வீட்டில் மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதும், நாளிதழ் வாசிக்கும்போதும், வஜ்ராசனத்தில் இருக்கலாம். தினசரி 15 நிமிடங்கள் இருந்தால் போதும்.
24 வீட்டில் இடம் இருந்தால், பூச்செடிகள் வளர்க்கலாம். அந்த நறுமணம்கூட மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துதான்.
25 புகை பிடித்தல், மது அருந்துதல், புகையிலை மெல்லுதல் போன்ற பழக்கங்களை விட்டுவிட்டால், இளமை உங்களை விட்டு எங்கே போகப்போகிறது?